நல்வரவு

தொழில் அமைச்சு

நியாயமான வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் ஆற்றல்மிக்க பணியாளர்களை உருவாக்குவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

0
இணைந்த நிறுவனங்கள்
0+
அமுல்படுத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்கள்
0
ஏற்று அங்கீகரிக்கப்பட்ட ILO சமவாயங்கள்
0K
மொத்த பார்வையாளர்கள்

தொழில் அமைச்சு பற்றி

தனியார் மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் உள்ள ஊழியர்களின் தொழில்முறை உரிமைகளைப் பாதுகாத்தல், சமூகப் பாதுகாப்பு, தொழிற்துறை அமைதியை உறுதி செய்தல், பயிற்சி பெற்ற தொழிலாளர்களை தொழிற் சந்தைக்கு வழிநடத்துதல், தொழில் வாய்ப்பை உறுதி செய்தல், தொழிற் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் நாட்டில் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பொருளாதார அபிவிருத்திக்கு உள்நாட்டு பணியாளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை வகுத்து செயல்படுத்துவதே தொழில் அமைச்சின் பிரதான பணியாகும்.

இந்தப் பணியை நிறைவேற்றுவதில், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் இலங்கையால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சமவாயங்கள் அடிப்படையில் தாபித்த 2022.07.22 திகதியிட்ட 2289/43 ஆம் இலக்கம் மற்றும் 2024.11.25 திகதியிட்ட 2412/08 ஆம் இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புகளின் அடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் தேசிய கொள்கை அடிப்படையில் தாபிக்கப்பட்ட தொழில்விடயப்பரப்பு மற்றும் அமைச்சுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் விடயப்பரப்பு தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை திட்டமிடுதல், செயற்படுத்துதல், மேற்பார்வை செய்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கையில் ஈடுபடல் இந்த அமைச்சின் பிரதான செயற்பாடு ஆகும்.

Ministry of Labour Head Office

அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள்

தொழில் திணைக்களம்

இலங்கையில் மொத்த பணியாளர்களில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தனியார் மற்றும் பகுதி அளவிலான அரசுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை உறுதி செய்வதன் மூலமும், தொழில் தருநர் -பணியாளர் உறவுகளை மேம்படுத்துவதன் மூலமும், நிறுவன மட்டத்தில் தொழில்துறை அமைதியைப் பாதுகாப்பதன் மூலமும் ஒரு ஒழுக்கமான பணிச்சூழலை உருவாக்குவதே தொழில் திணைக்களத்தின் முக்கிய வகிபங்கு ஆகும்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட தொழில் திணைக்களம், டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மிகவும் திறமையான சேவைகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் தற்போது இறங்கியுள்ளது. குறிப்பாக, மின்னணு சேவைகள் (e-services) அறிமுகப்படுத்தப்படுவது வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளை மிகவும் எளிதாகவும் வினைத்திறனாகவும் நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும்.

அதன்படி, தொழில் தருநர்-பணியாளர் உறவுகளை வளர்ப்பதன் மூலமும், ஊழியர் உரிமைகளை வலுப்படுத்துவதன் மூலமும் தொழில்துறை அமைதியை மேம்படுத்துவதற்கு திணைக்களம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அண்மைய செய்திகள்

2026 நவம்பர் 17 செய்திகள்

கட்டாயத் தொழிலாளர் இல்லா இலங்கையை நோக்கி – அரச அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத் தொடர் தொடர்ந்து முன்னேறுகிறது

கட்டாயத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களை அடையாளம் காணுதல் தொடர்பாக அரச அதிகாரிகளின் அறிவு...

2026 நவம்பர் 17 செய்திகள்

புதிய தொழிலாளர் சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முன்மொழிவுகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் மன்றத்தினால், முன்மொழியப்பட்டுள்ள தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புகளில்...

2026 நவம்பர் 13 செய்திகள்

தேசிய குடிவரவு தொழிலாளர் இடம்பெயர்வு கொள்கையை வடிவமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இலங்கைக்கான குடிவரவு தொழிலாளர் இடம்பெயர்வு கொள்கையை உருவாக்குவதற்காக அமைச்சரவை அனுமதியுடன், தொழிலாளர் அமைச்சின்...

அணுகல்தன்மை பார்வையைத் தனிப்பயனாக்குங்கள்
உரை அளவு
வண்ண முறை
உரையை ஒலியாக்குதல்