தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு (NLAC)
தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு (NLAC)
தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு (NLAC) என்பது முத்தரப்பு கலந்தாய்வு சமவாயத்தை ஏற்று அங்கீகரித்ததைத் தொடர்ந்து, சமூக மற்றும் தொழிலாளர் கொள்கைகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் தொடர்பான விடயங்களில் தேசிய மட்டத்தில் அரசாங்கம், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் அமைப்புகளுக்கு இடையே கலந்தாலோசனை மற்றும் ஒத்துழைப்பை வழங்குவதற்காக 1994 இல் நிறுவப்பட்ட தேசிய முத்தரப்பு ஆலோசனைக் பொறிமுறையாகும். தொழிலாளர் துறைக்கு பொறுப்பான அமைச்சரே குழுவின் தலைவராவார். NLAC தொடங்கப்பட்டதிலிருந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது மற்றும் நாட்டில் தொழிற்துறை அமைதியைப் பேண உதவியுள்ளது. தொழிலாளர் கொள்கைகளில் NLAC இன் கருத்து பல மன்றங்களில் பெரிதும் மதிக்கப்படுகிறது மற்றும் கொள்கை உருவாக்கும் நடைமுறையில் தகுந்த பரிசீலனை வழங்கப்படுகிறது.
NLAC இன் நோக்கங்கள் பின்வருமாறு;
- சமூக மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திற்கும் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் அமைப்புகளுக்கும் இடையே சமூக உரையாடலை மேம்படுத்துதல்.
- சமூக மற்றும் தொழிலாளர் கொள்கைகள், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் சர்வதேச தொழிலாளர் தரநிலைகளை ஏற்று அங்கீகரித்தல், பயன்படுத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விடயங்களில் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் அமைப்புகளின் கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் உதவிகளைப் பெற அரசாங்கத்திற்கு ஒரு மன்றத்தை வழங்குதல்.
- பொருளாதாரத்தை மேம்படுத்துதல், வேலை நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் ஆகிய நோக்கங்களுடன் அரசாங்கத்திற்கும் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் அமைப்புகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல், நல்லுறவு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை வளர்த்தல்.
NLAC இன் பணிகள் பின்வருமாறு;
பின்வரும் விடயங்களில் அரசாங்கத்திற்கும் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் அமைப்புகளுக்கும் இடையே கலந்தாலோசனை மற்றும் ஒத்துழைப்பு;
- தேசிய அமைப்புகளை நிறுவுதலும் இயங்குதலும்
- தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் நலன்களைப் பாதிக்கும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை உருவாக்குதலும் நடைமுறைப்படுத்துதலும்
- தொழிலாளர் தரநிலைகளை ஏற்று அங்கீகரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பிற்கு அனுப்பும் பதில்கள் குறித்த விடயங்களைப் பரிசீலித்தல்
அமைப்பு (கூட்டுரு)
- கௌரவ தொழில் அமைச்சர் NLAC இன் தலைவராகச் செயல்படுகிறார்
- அமைச்சர் அமைச்சின் பொருத்தமான அதிகாரி ஒருவரை NLAC இன் செயலாளராக நியமிக்கிறார்
- பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் உள்ள முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் "மிகவும் பிரதிநிதித்துவ" அமைப்புகளிலிருந்து கௌரவ அமைச்சரால் NLAC இல் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்
NLAC எவ்வாறு இயங்குகிறது
- NLAC இன் பதවிக் காலம் ஒரு வருடமாகும்
- குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது அமைச்சரால் தீர்மானிக்கப்படும் வகையில் NLAC கூட்டங்கள் தவறாமல் கூடுகின்றன
- தேவையான போதெல்லாம் நிபுணர் உதவியுடன் சிறப்புப் பிரச்சினைகளை ஆராய்ந்து NLAC க்கு அறிக்கை செய்ய முத்தரப்பு தொழிற்துறைக் குழுக்கள் மற்றும் தற்காலிகக் குழுக்கள் நியமிக்கப்படலாம்.
தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள்
| எண் | பெயர் | பதவி | தொழிற்சங்கத்தின் பெயர் |
|---|---|---|---|
| 01 | திரு. வஜிர எல்லேபொல | பணிப்பாளர் நாயகம் | இலங்கை முதலாளிமார் சம்மேளனம் |
| 02 | திரு. அத்ஹில் காசிம் | பிரதிப் பணிப்பாளர் நாயகம் | இலங்கை முதலாளிமார் சம்மேளனம் |
| 03 | திருமதி. கீர்த்தனா கிருஷ்ணகுமார் (சட்டத்தரணி) | மூத்த சட்ட ஆலோசகர், குழு சட்டத் துறை மற்றும் துணைத் தலைவர் | ஜோன் கீல்ஸ் குழுமம் |
| 04 | திரு. ஜயேந்திர டி சில்வா | பொது மேலாளர் - குழு மனித வள மேலாண்மை | ஹேலீஸ் பிஎல்சி |
| 05 | திரு. சுரேஷ் நோயல் முத்தையா | குழு தலைமை மனித வள அதிகாரி | எய்ட்கன் ஸ்பென்ஸ் கார்ப்பரேட் பைனான்ஸ் (தனியார்) லிமிடெட் |
| 06 | திருமதி. கீதா யசநாயக்க | குழு தலைமை மனித வள அதிகாரி | கார்கில்ஸ் (சிலோன்) பிஎல்சி |
| 07 | திரு. தம்மிக்க பெர்னாண்டோ | தலைவர் | சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கம் |
| 08 | திரு. சாரக குணவர்தன | பணிப்பாளர் - மனித வளங்கள் மற்றும் நிலையான வணிகம் | எம்ஏஎஸ் ஆக்டிவ் |
| 09 | திரு. ஷிரான் பெர்னாண்டோ | தலைமை பொருளாதார கொள்கை ஆலோசகர் | இலங்கை வர்த்தக சபை |
| 10 | திரு. ஹேமந்த பாலசூரிய | கௌரவ செயலாளர் | இலங்கை உணவு பதப்படுத்துவோர் சங்கம் (SLFPA) |
| 11 | திரு. லலித் ஒபயசேகர | செயலாளர் நாயகம் | இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம் |
| 12 | திரு. யோஹான் லாரன்ஸ் | செயலாளர் நாயகம் | கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் |
| 13 | திரு. சம்பத் ஜயசுந்தர | SLASSCOM பணிப்பாளர்/ தலைமை நிர்வாக அதிகாரி/ பணிப்பாளர் - hSenid Business Solutions | இலங்கை மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் சங்கம் (SLASSCOM) |
| 14 | திரு. எம்.டி.எஸ் ஹேமந்த குமார பெரேரா | செயலாளர் நாயகம் | இலங்கை ஆடை சங்க சம்மேளனம் |
| 15 | கேப்டன் லால் தென்னகோன் | மூத்த உதவிச் செயலாளர் நாயகம் | இலங்கை கட்டுமான தொழில்துறை சம்மேளனம் |
| 16 | திரு. எச்.டி சமிந்த | துணைத் தலைவர் - மனித வளங்கள் | அசோசியேட்டட் சியட் (தனியார்) லிமிடெட் |
| 17 | திரு. கவிந்த ராஜபக்ச | மூத்த பிரதித் தலைவர் | இலங்கை தேசிய வர்த்தக சபை |
தொடர்புத் தகவல்கள்
திரு. பி. வசந்தன்
மூத்த உதவிச் செயலாளர் (வெளிநாட்டு உறவுகள்)
- தொலைபேசி: +94-11-2368609
- தொலைநகல்: +94-11-2368609
- மின்னஞ்சல்: sasfr@sltnet.lk