செய்திகள்
தேசிய குடிவரவு தொழிலாளர் இடம்பெயர்வு கொள்கையை வடிவமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இலங்கைக்கான குடிவரவு தொழிலாளர் இடம்பெயர்வு கொள்கையை உருவாக்குவதற்காக அமைச்சரவை அனுமதியுடன், தொழிலாளர் அமைச்சின் செயலாளரின் தலைமையிலும் அரச நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளின் பங்கேற்புடனும் நியமிக்கப்பட்ட குழுவினால், இப்புதிய கொள்கை தொடர்பாக வர்த்தக சபைகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டுவதற்கும் அவர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்குமான விசேட கலந்துரையாடல் அண்மையில் (10) முற்பகல் நாராஹேன்பிட்ட, மெஹெவர பியெச கட்டிடத்தில் அமைந்துள்ள தொழிலாளர் அமைச்சில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) தொழில்நுட்ப உதவியுடன், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இக்கொள்கை தற்போது அதன் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி 2027 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பெறப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான அனுமதி வழங்கும் நடைமுறை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை முதலீட்டு சபை மற்றும் கைத்தொழில் அமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஊடாக தனித்தனி நடைமுறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனங்களுக்கிடையில் போதுமான ஒருங்கிணைப்பு இல்லாமையும், மத்தியகப்படுத்தப்பட்ட தரவுத்தள அமைப்பு இல்லாமையும் காரணமாக, நாட்டின் உண்மையான தொழிலாளர் பற்றாக்குறையைத் துல்லியமாக அடையாளம் காணுதல், வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவையை மதிப்பீடு செய்தல் மற்றும் அவர்களைப் பற்றிய முறையான கண்காணிப்பை மேற்கொள்ளுதல் சவாலாக இருந்து வருகிறது.
மேலும், உரிய ஒழுங்குமுறை இல்லாமல் வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டின் வேலைவாய்ப்புத் துறையில் இணைக்கப்படுவது, உள்நாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். மறுபுறம், தற்போதைய நடைமுறையில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் பல்வேறு வகையான சுரண்டல்களுக்கு ஆளாகும் அபாயமும் நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலைகள் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயருக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. இப்பிரச்சினைகளுக்கான நிலையான தீர்வை வழங்குவதே இந்த ஒருங்கிணைந்த குடிவரவு தொழிலாளர் இடம்பெயர்வு கொள்கையை உருவாக்குவதன் நோக்கமாகும்.
இந்தக் கொள்கையின் மூலம், உள்நாட்டு தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுங்குமுறை என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர் இடம்பெயர்வு முகாமைத்துவ முறைமையொன்றை நிறுவுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகால பதிவுகள்
-
கட்டாயத் தொழிலாளர் இல்லா இலங்கையை நோக்கி – அரச அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத் தொடர் தொடர்ந்து முன்னேறுகிறது
2026 நவம்பர் 17 செய்திகள் -
புதிய தொழிலாளர் சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முன்மொழிவுகள்
2026 நவம்பர் 17 செய்திகள் -
தேசிய குடிவரவு தொழிலாளர் இடம்பெயர்வு கொள்கையை வடிவமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
2026 நவம்பர் 13 செய்திகள் -
காலி தொழிலாளர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட பல சேவைகள் இனி அம்பலாங்கொடையிலேயே
2026 நவம்பர் 13 செய்திகள் -
இலங்கை மற்றும் தென் கொரியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க பல்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்
2026 நவம்பர் 3 செய்திகள் -
தொழிலாளர்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவது அல்ல, அவற்றை மேலும் வலுப்படுத்தும் முற்போக்கான தொழிலாளர் சட்ட அமைப்பை உருவாக்குவதே முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புகளின் பிரதான நோக்கம் - தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
2026 அக்டோபர் 29 செய்திகள் -
இலங்கையின் உள்நாட்டு தொழிலாளர் இடம்பெயர்வு கொள்கையின் (Inward Labour Migration Policy) ஆரம்ப வரைவுத் திட்டம் தொடர்பாக பங்குதாரர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
2026 அக்டோபர் 22 செய்திகள் -
தொழிலாளர்களின் உயிரின் பெறுமதியை பணத்தால் அளவிட முடியாது - தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ
2026 அக்டோபர் 14 செய்திகள் -
சமூக பாதுகாப்பு சேவைகள், பாதுகாப்பு ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பெண்கள் 2026–2035 தசா ஆண்டு தேசிய செயல்திட்டத் திட்டம் செயல்பாட்டிற்கான அமைச்சக நிர்வாக உரிமை உள்ளது.
2026 அக்டோபர் 9 செய்திகள் -
தொழிற்சங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் சிறப்பு கவனம் இந்த ஆண்டு
2026 அக்டோபர் 8 செய்திகள்