எங்களைப் பற்றி

Ministry Building Official Speaker Audience

அறிமுகம்

தனியார் மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் உள்ள ஊழியர்களின் தொழில்முறை உரிமைகளைப் பாதுகாத்தல், சமூகப் பாதுகாப்பு, தொழிற்துறை அமைதியை உறுதி செய்தல், பயிற்சி பெற்ற தொழிலாளர்களை தொழிற் சந்தைக்கு வழிநடத்துதல், தொழில் வாய்ப்பை உறுதி செய்தல், தொழிற் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் நாட்டில் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பொருளாதார அபிவிருத்திக்கு உள்நாட்டு பணியாளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை வகுத்து செயல்படுத்துவதே தொழில் அமைச்சின் பிரதான பணியாகும்.

இந்தப் பணியை நிறைவேற்றுவதில், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் இலங்கையால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சமவாயங்கள் அடிப்படையில் தாபித்த 2022.07.22 திகதியிட்ட 2289/43 ஆம் இலக்கம் மற்றும் 2024.11.25 திகதியிட்ட 2412/08 ஆம் இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புகளின் அடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் தேசிய கொள்கை அடிப்படையில் தாபிக்கப்பட்ட தொழில்விடயப்பரப்பு மற்றும் அமைச்சுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் விடயப்பரப்பு தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை திட்டமிடுதல், செயற்படுத்துதல், மேற்பார்வை செய்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கையில் ஈடுபடல் இந்த அமைச்சின் பிரதான செயற்பாடு ஆகும்.

95 வருட கால அனுபவம்
95K திருப்தியடைந்த குடிமக்கள்

தொடர்புடைய அமைப்புகள்

எமது நோக்கு

"திருப்திமிகு உற்பத்தித்திறன் கொண்ட இலங்கைத் தொழிலணி"

எமது பணிப்பொறுப்பு

"தொழிற்துறை அமைதி மற்றும் ஒத்துழைப்பு, சமூகப் பாதுகாப்பு, வேலையாட்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் மூலம் சமூக-பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்தல்."

நிறுவன கட்டமைப்பு வரைபடம்

அமைச்சின் தலைமைத்துவம்

Dr. Anil Jayantha Fernando

கௌரவ. தொழில் அமைச்சர்

கலாநிதி. அனில் ஜயந்த பெர்னாண்டோ

Mr. Mahinda Jayasinghe

கௌரவ. தொழில் பிரதி அமைச்சர்

திரு.மகிந்த ஜயசிங்ஹ

Mr. S.M.Piyatissa

செயலாளர்

திரு. எஸ்.எம்.பியதிஸ்ஸ

அமைச்சு தலைமை

Ms. T.P. Muditha Pathmajay

மேலதிக செயலாளர் (நிர்வாகம்)

செல்வி. டி. பி. முதிதா பத்மஜாயி

Mr. L.T.G.D Darshana

சிரேஸ்ட உதவிச் செயலாளர் (நிர்வாகம்)

திரு. எல். டி. ஜி. டி. தர்ஷன

Ms. K.M.S.M. Chathurangi

உதவிச் செயலாளர் (பெறுகை)

கே.எம்.எஸ்.எம். சதுரங்கி

Ms. Yashoda Thissera

உதவிச் செயலாளர் (தாபனம்)

திருமதி. யசோதா திசேரா

Ms. W.P.A.G. Wijesooriya

சட்ட அதிகாரி

திருமதி. டபிள்யூ. பி. ஏ. ஜி. விஜேசூரிய

அமைச்சின் கீழுள்ள பிரிவுகள்

நிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு

நிர்வாகப் பிரிவு நிர்வாகம், நிறுவனங்கள் மற்றும் சட்டம் என மூன்று துணைப் பிரிவுகளின் கீழ் செயல்படுகிறது. அமைச்சின் நிர்வாகம், மனிதவள மேலாண்மை, பொது பராமரிப்பு, பணியாளர் பயிற்சி மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்புடைய பணிகள் நிர்வாக மற்றும் நிறுவனப் பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், புதிய போக்குகளுக்கு ஏற்ப தற்போதுள்ள தொழில் சட்டங்களைப் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல், அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சமவாயங்களை செயல்படுத்துவதற்கும், பின்தொடர்வதற்கும் உதவும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் போன்றவை சட்டப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. கூடுதலாக, நிர்வாகப் பிரிவால் செய்யப்படும் செயல்பாடுகள் பின்வருமாறு.

  • அமைச்சரவை விசேடாம்பங்களை தயாரித்தல் மற்றும் அமைச்சரவை முடிவுகள் மீதான நடவடிக்கை.
  • ஆலோசனைக் குழுக்கள், பொது மனு குழுக்கள் மூலம் செய்யப்படும் கணக்குமுடிப்புகளுக்கு பதில்களை வழங்குதல் மற்றும் பாராளுமன்ற கேள்விகளுக்கு பதில்களை வழங்குதல்.
  • அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நியதி சட்டப்பூர்வ அமைப்புகளின் ஆண்டு அறிக்கைகள் மற்றும் செயலாற்றுகை அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.
  • இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்தத்தங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உத்தரவின்படி தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய அறிக்கைகளை சேகரித்து சமர்ப்பித்தல்.
  • அமைச்சுக்குச் சொந்தமான அம்பாறை சுற்றுலா பங்களாவின் முன்பதிவு, பராமரிப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள்.
  • அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நியதி சட்டப்பூர்வ அமைப்புகளின் சொந்தமான நிலம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான செயல்பாடுகள்.
  • அமைச்சின் கீழுள்ள நியதி சட்டப்பூர்வ அமைப்புகளின் பணிப்பாளர்களின் குழுவை நியமிப்பது தொடர்பான செயல்பாடுகள்.
  • ஜூலை வேலைநிறுத்தக் கொடுப்பனவுகள் தொடர்பான செயல்பாடுகள்.

பொதுச் சேவைச் சிறப்பிற்கான எமது அர்ப்பணிப்பு

பிரஜைகள் சாசனமானது அனைத்து குடிமக்களுக்கும் நம்பகமான, நேரடியான மற்றும் உயர்தர சேவைகளை வழங்குவதற்கான அமைச்சின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இது எமது சேவைத் தரங்கள், பொறுப்புகள் மற்றும் பொதுமக்களின் உரிமைகளை தெளிவாக வரையறுத்து, ஒவ்வொரு தொடர்பிலும் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்கிறது.

இந்த சாசனத்தின் மூலம், நம்பிக்கையை கட்டியெழுப்புதல், சேவை வழங்கலை மேம்படுத்துதல் மற்றும் நாம் சேவை செய்யும் மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பதிலளிக்கும் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

பதிவிறக்கம்
அணுகல்தன்மை பார்வையைத் தனிப்பயனாக்குங்கள்
உரை அளவு
வண்ண முறை
உரையை ஒலியாக்குதல்