செய்திகள்
கட்டாயத் தொழிலாளர் இல்லா இலங்கையை நோக்கி – அரச அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத் தொடர் தொடர்ந்து முன்னேறுகிறது
கட்டாயத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களை அடையாளம் காணுதல் தொடர்பாக அரச அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிட அடிப்படையிலான திறன் மேம்பாட்டு பயிற்சி வேலைத்திட்டத் தொடரின் மேலும் ஒரு நிகழ்ச்சி நேற்று (16) அத்துருகிரிய தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
கட்டாயத் தொழிலாளர் ஒழிப்பில் முன்னணி பங்கை வகிக்கும் அரச அதிகாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொழில் அமைச்சின் தலைமையில் 2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத் தொடர் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி நிகழ்ச்சியாக இம்மூன்று நாள் செயலமர்வு நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மேல் மற்றும் தென் மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி தொழில் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
2025 ஆம் ஆண்டில் கட்டாயத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களை அடையாளம் காணுதல் தொடர்பாக பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி (Training of Trainers – ToT) நிகழ்ச்சி சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. இதுவரை 2025 ஆம் ஆண்டில் இரண்டு நிகழ்ச்சிகளும், 2026 ஆம் ஆண்டில் ஆறு நிகழ்ச்சிகளும் அடங்கலாக மொத்தம் எட்டு செயலமர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டில் மத்திய மாகாண அதிகாரிகளுக்காக ஒரு நிகழ்ச்சி கண்டியில் நடத்தப்பட்டதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அதிகாரிகளுக்காக தமிழ்மூலமாக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி ஒக்டோபர் மாதத்தில் கொழும்பில் நடைபெற்றது.
இந்த வேலைத்திட்டத் தொடரின் கீழ் இதுவரை தொழில் திணைக்களத்தின் 140 அதிகாரிகள், இலங்கை பொலிஸின் 125 அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவின் 40 அதிகாரிகள் உட்பட மொத்தம் 305 அதிகாரிகள் பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர். மேலும், மேற்கண்ட மூன்று நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 30 அதிகாரிகள் பயிற்றுவிப்பாளர்களாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இப்பயிற்றுவிப்பாளர்கள் எதிர்காலத்திலும் குறித்த நிகழ்ச்சிகளுக்கான வளவள நிபுணர்களாக தொடர்ந்து பங்களிப்பர்.
இந்த மூன்று நாள் செயலமர்வின் போது கட்டாயத் தொழிலாளர்களை அடையாளம் காணுதல், அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய சட்ட நிவாரணங்கள் மற்றும் பரிகாரங்கள், அத்தகைய சம்பவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றில் விரிவான கவனம் செலுத்தப்படும். மேலும், சிறுவர் தொழில் மற்றும் மனிதக் கடத்தல் ஆகிய ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து உண்மை சம்பவங்கள் மற்றும் நடைமுறைச் சூழல்களை அடிப்படையாகக் கொண்டு கலந்துரையாடல்கள் நடத்தப்பட உள்ளன.
விரிவுரைகளில் மட்டும் வரையறுக்கப்படாமல், ஊடாடும் கலந்துரையாடல்கள், குழு நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் அமர்வுகளும் உள்ளடக்கப்படும் வகையில் இந்த செயலமர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள் தங்களது அனுபவங்களையும் அறிவையும் பரிமாறிக்கொள்ளவும், களத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்களை கூட்டாக அடையாளம் கண்டு தீர்வுகளைத் தேடவும், நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு வலையமைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.
இலங்கையில் கட்டாயத் தொழிலாளர் ஒழிப்பிற்குத் தேவையான நிறுவனத் திறன், அறிவு மற்றும் செயற்பாட்டு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, இந்தப் பயிற்சி வேலைத்திட்டத் தொடரை 2027 ஆம் ஆண்டிலும் மேலும் விரிவுபடுத்தி முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முன்மொழிவுகள்
புதிய புதுப்பிப்புகள் இல்லை
சமீபகால பதிவுகள்
-
கட்டாயத் தொழிலாளர் இல்லா இலங்கையை நோக்கி – அரச அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத் தொடர் தொடர்ந்து முன்னேறுகிறது
2026 நவம்பர் 17 செய்திகள் -
புதிய தொழிலாளர் சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முன்மொழிவுகள்
2026 நவம்பர் 17 செய்திகள் -
தேசிய குடிவரவு தொழிலாளர் இடம்பெயர்வு கொள்கையை வடிவமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
2026 நவம்பர் 13 செய்திகள் -
காலி தொழிலாளர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட பல சேவைகள் இனி அம்பலாங்கொடையிலேயே
2026 நவம்பர் 13 செய்திகள் -
இலங்கை மற்றும் தென் கொரியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க பல்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்
2026 நவம்பர் 3 செய்திகள் -
தொழிலாளர்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவது அல்ல, அவற்றை மேலும் வலுப்படுத்தும் முற்போக்கான தொழிலாளர் சட்ட அமைப்பை உருவாக்குவதே முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புகளின் பிரதான நோக்கம் - தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
2026 அக்டோபர் 29 செய்திகள் -
இலங்கையின் உள்நாட்டு தொழிலாளர் இடம்பெயர்வு கொள்கையின் (Inward Labour Migration Policy) ஆரம்ப வரைவுத் திட்டம் தொடர்பாக பங்குதாரர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
2026 அக்டோபர் 22 செய்திகள் -
தொழிலாளர்களின் உயிரின் பெறுமதியை பணத்தால் அளவிட முடியாது - தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ
2026 அக்டோபர் 14 செய்திகள் -
சமூக பாதுகாப்பு சேவைகள், பாதுகாப்பு ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பெண்கள் 2026–2035 தசா ஆண்டு தேசிய செயல்திட்டத் திட்டம் செயல்பாட்டிற்கான அமைச்சக நிர்வாக உரிமை உள்ளது.
2026 அக்டோபர் 9 செய்திகள் -
தொழிற்சங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் சிறப்பு கவனம் இந்த ஆண்டு
2026 அக்டோபர் 8 செய்திகள்