யாழ்ப்பாணத்தில் சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு குறித்த ஒரு நிகழ்ச்சித் திட்டம்….
தொழில் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர்கள்; விவகாரப் பிரிவு, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் திகதி வரும் உலக சிறுவர்; தினத்துக்கு இணைவாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது, அதன்படி, இந்த மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் உலக சிறுவர்; தின கொண்டாட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, அந்தப் பாடசாலையில் ஒன்று முதல் ஐந்தாம் தரம் வரை கற்கும்; வகுப்பு மாணவர்கள் “சின்னஞ்சிறார்களாகிய எமது சிறுவர்; உலகம்” என்ற தலைப்பில் ஓவியம் வரையவும், சிறுவர் து~;பிரயோகத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட நாடக அடிப்படையிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தை வழங்கவும் உள்ளனர்.
இந்தக் கொண்டாட்டத்திற்கு மேலதிகமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக சிறுவர்; தொழிலாளர் உள்ளடங்கும் நேர்வுள்ள பகுதிகளில் சிறுவர்; தொழிலாளர் குறித்த துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவும், காணொளி காட்சிகளை காட்சிப்படுத்தவும், தொழில்துறை துறையில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்வழங்குநர்களுக்கு சிறுவர் உழைப்பற்ற தொழிற் சூழலை உருவாக்குவது குறித்த அறிவை வழங்கவும் தொழில் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர்; விவகாரப் பிரிவு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது.