மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் வேலைவாய்ப்பு கண்காட்சி இம்மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலக அலுவலக வளாகத்தில்…
தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்படும் வேலைவாய்ப்பு கண்காட்சி நிகழ்ச்சி இந்த மாதம் 22 ஆம் தேதி யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெறும்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், யாழ்ப்பாண மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கிய மாவட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்கும் வேலை தேடுபவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை ஒன்றிணைத்து, இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற தேவையான வசதிகளை வழங்குவதாகும்.
இதன்போது 30 தனியார் நிறுவனங்கள் மற்றும் 14 பயிற்சி நிறுவனங்களை பங்குபற்ற வைத்து வேலை தேடுபவர்களுக்கு சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் வேலைவாய்ப்பு கண்காட்சி நிகழ்ச்சித் திட்டத்திற்கு வருகை தரும் தொழில் மற்றும் பயிற்சி வேட்பாளர்களை நிகழ்நிலை (online) முறைமையூடாக திணைக்களத்தின் தரவு தளத்தில் பதிவு செய்தலும் திணக்களத்தால் மேற்கொள்ளப்படும்.
இந்த வேலைவாய்ப்பு கண்காட்சி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்கும் அனைவரையும் தொழில் தேடுபவர்கள், தொழில் வழிகாட்டுதல் தேவைப்படுபவர்கள், முயற்சியாண்மையாளராக வளர விரும்புபவர்கள் மற்றும் பயிற்சி தேவைப்படுபவர்கள் என்பதாக குழுக்களாக பிரித்து அவர்களுக்கு தேவையான எதிர்கால திட்டங்களைத் தயாரிக்க மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொழில் சந்தையில் ஏற்படும் புதிய போக்குகளை குறித்து அறிவூட்டல் செய்தலும் இதன்போது மேற்கொள்ளப்படும் என மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.