புதிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

தொழில் அமைச்சினால் இந்த மாதம் 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு தழுவிய நடமாடும் சேவை அங்குரார்ப்பணம்; யாழ்ப்பாணத்தில்

ஊடகங்கள்

தொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளை வழங்கும் நோக்கில், இந்த மாதம் 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் அமைந்துள்ள மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட நடமாடும் சேவை நடைபெறும்.
தனியார் மற்றும் பகுதியளவிலான அரச திணைக்களங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் ஊழியர் சேமலாப வைப்பு நிதி கணக்கு விவரங்கள் மற்றும் நிலுவைகளை சரிபார்க்கவும், சரிசெய்யப்படாத உறுப்பினர் கணக்கு விவரங்களை தேசிய அடையாள அட்டையின்படி சரிசெய்யவும், உறுப்பினர்களைப் பதிவு செய்யவும், முறைப்பாடுகளைப் பெறவும் மற்றும் தொழில் சட்டங்கள் தொடர்பான ஆலோசனை பெறவும் நடமாடும்; சேவையில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் தங்கள் சேவைகளைப் பெற வரும்போது, அவர்களின் தேசிய அடையாள அட்டை, தற்போது ஊழியர் சேமலாப வைப்பு நிதியில் பதிவு செய்யப்பட்டிருந்தால் பி அட்டை மற்றும் தேவையான திருத்தங்களைச் செய்ய சம்பந்தப்பட்ட தொழில் வழங்குநரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் ஆகியவற்றை இந்த மாதம் 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை தொடர்புடைய தொழில் அலுவலகங்களுக்கு கொண்டு வருமாறு தொழில் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.
இந்த நடமாடும் சேவையின் தொடக்க விழா இம்மாதம் 22 ஆம் தேதி யாழ்ப்பாண மாவட்ட தொழில் அலுவலகத்தில் பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தலைமையில் நடைபெற உள்ளது.
இத்தினத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தால் நடத்தப்படும் வேலைவாய்ப்பு கண்காட்சி நிகழ்ச்சி, மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கான சிரம வாசனா நிதியத்தால் நடத்தப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் உலக சிறுவர்; தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் சிறுவர், தொழிலாளர் ஒழிப்பு குறித்த
நிகழ்ச்சி ஆகியவற்றை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், தேசிய தொழிலசார்; பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தால் யாழ்ப்பாண பளை பிரதேசத்தில் பனையோலையொட்டிய தொழிற்றுறையில் ஏற்படும் விபத்துகளை தவிர்த்து அந்த தொழிற்றுறையில் ஈடுபடுதல் குறித்தும் யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரியில் அதன் மாணவர்களுக்கு தொழில் ஆபத்துக்கள் மற்றும் தொழில்சார் நோய்கள் தவிர்த்து தொழிலில் ஈடுபடுவது எவ்வாறு என்பது குறித்தும் அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply