செய்திகள்
சமூக பாதுகாப்புத் துறை தொடர்பான பத்தாண்டு தேசிய செயற்திட்டம் பற்றிய கலந்துரையாடல்
சமூக பாதுகாப்புத் துறை தொடர்பான பத்தாண்டு (2026 – 2035) தேசிய அமுலாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப விடயங்களை கலந்துரையாட சந்திப்பொன்று அண்மையில் (2026.08.31) கொழும்பு Cinnamon Lakeside ஹோட்டலில் நடைபெற்றது. தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், சமூக பாதுகாப்புத் துறை சார்ந்த பல தொழில்நுட்ப விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
தேசிய சமூக பாதுகாப்பு கொள்கை மற்றும் மூலோபாயத்திற்கு அமைய, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் "சமூக பாதுகாப்புத் துறை தொடர்பான பத்தாண்டு தேசிய அமுலாக்கல் திட்டம் (2026-2035)" தயாரிக்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களின் தலைமையில் தயாரிக்கப்பட்ட இந்த அமுலாக்கல் திட்டம், தற்போது அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான இறுதிப் கட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை உரிய முறையில் மதிப்பிடப்படாத, வீடுகளுக்குள் இடம்பெறும் ஊதியமற்ற பராமரிப்பு சேவைகளை அடையாளம் கண்டு, அவற்றை நாட்டின் உத்தியோகபூர்வ பொருளாதாரத் துறையாக மாற்றுவதே இந்த அமுலாக்கல் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அத்துடன், பராமரிப்புத் துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தேசிய தொழிற் தகைமை (NVQ) சான்றிதழ் மற்றும் பங்களிப்புடன் கூடிய சமூக பாதுகாப்பு முறைமைகளை வழங்குவதற்கும், நாட்டில் 18% ஆகவுள்ள முதியோர் தொகைக்கும் 3.7% ஆகவுள்ள கடுமையான ஊனமுற்ற நபர்களுக்கும் தேவையான விசேட பராமரிப்பு சேவைகளை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்புச் சுமைகளைக் குறைப்பதன் மூலமும் பகிர்ந்தளிப்பதன் மூலமும், தற்போது 32.3% போன்ற குறைந்த மட்டத்தில் காணப்படும் பெண்களின் தொழிற்படை பங்கேற்பை உயர்த்துவதற்குத் தேவையான உதவிச் கட்டமைப்பை தேசிய மட்டம் முதல் கிராமிய மட்டம் வரை முனைப்பாக உருவாக்குவதே இதன் முதன்மை எதிர்பார்ப்பாகும்.
சமூக பாதுகாப்புத் துறை தொடர்பான இந்த அமுலாக்கல் திட்டம் குறித்த சந்திப்பில் தொழில்நுட்ப முன்வைப்பை , மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் (மனிதவள முகாமைத்துவம்) சம்பிகா சிரோமாலி, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் பணிப்பாளர் (சமூக பாதுகாப்பு) வாசனா குணரத்ன, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் செயற்பாடுகள்) கே.பி.சி. சுபாஷினி மற்றும் மூன்றாம் நிலை, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் (NVQ Division) கலாநிதி தில்ருக்ஷி ஹேரத் ஆகியோ வழங்கினர்.
இச்சந்திப்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை பிரதிநிதி ஜோனி சிம்ப்சன் அம்மையார் உட்பட இத்துறை சார்ந்த பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
சமீபகால பதிவுகள்
-
கட்டாயத் தொழிலாளர் இல்லா இலங்கையை நோக்கி – அரச அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத் தொடர் தொடர்ந்து முன்னேறுகிறது
2026 நவம்பர் 17 செய்திகள் -
புதிய தொழிலாளர் சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முன்மொழிவுகள்
2026 நவம்பர் 17 செய்திகள் -
தேசிய குடிவரவு தொழிலாளர் இடம்பெயர்வு கொள்கையை வடிவமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
2026 நவம்பர் 13 செய்திகள் -
காலி தொழிலாளர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட பல சேவைகள் இனி அம்பலாங்கொடையிலேயே
2026 நவம்பர் 13 செய்திகள் -
இலங்கை மற்றும் தென் கொரியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க பல்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்
2026 நவம்பர் 3 செய்திகள் -
தொழிலாளர்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவது அல்ல, அவற்றை மேலும் வலுப்படுத்தும் முற்போக்கான தொழிலாளர் சட்ட அமைப்பை உருவாக்குவதே முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புகளின் பிரதான நோக்கம் - தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
2026 அக்டோபர் 29 செய்திகள் -
இலங்கையின் உள்நாட்டு தொழிலாளர் இடம்பெயர்வு கொள்கையின் (Inward Labour Migration Policy) ஆரம்ப வரைவுத் திட்டம் தொடர்பாக பங்குதாரர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
2026 அக்டோபர் 22 செய்திகள் -
தொழிலாளர்களின் உயிரின் பெறுமதியை பணத்தால் அளவிட முடியாது - தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ
2026 அக்டோபர் 14 செய்திகள் -
சமூக பாதுகாப்பு சேவைகள், பாதுகாப்பு ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பெண்கள் 2026–2035 தசா ஆண்டு தேசிய செயல்திட்டத் திட்டம் செயல்பாட்டிற்கான அமைச்சக நிர்வாக உரிமை உள்ளது.
2026 அக்டோபர் 9 செய்திகள் -
தொழிற்சங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் சிறப்பு கவனம் இந்த ஆண்டு
2026 அக்டோபர் 8 செய்திகள்