Skip to content
default color brick color green color
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு NLAC
தேசிய தொழில் ஆலோசனை சபை

தேசிய தொழில் ஆலோசனை சபை என்பது சமூக மற்றும் தொழில் கொள்கைகள் மற்றும் சர்வதேச தொழில் தரங்கள் தொடர்பான விடங்களின் போது அரசு, தேசிய அடிப்படையிலான ஊழியர் மற்றும் தொழில் தருநர் அமைப்புகளுக்குமிடையில் ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய முத்தரப்பு ஆலோசனை பொறிமுறையாகும்.

தேசிய தொழில் ஆலோசனை சபையின் (NLAC) குறிக்கோள்,

  • சமூக மற்றும் தொழில் சிக்கல்கள் தொடர்பாக அரசுக்கும் ஊழியர் தொழில் தருநர் அமைப்புக்குமிடையில் சமூக கருத்தாடலை வளர்த்தல்.
  • சமூக மற்றும் தொழில் கொள்கைள், தொழில் சட்டம், மற்றும் சர்வதேச தொழில் உடன்படிக்கைகளை அங்கீகரித்தல், ஏற்புடையதாக்கிக்கொள்ளல், நடைமுறைப்படுத்தல் போன்ற இவ்விடயங்கள் தொடர்பில் ஊழியர், தொழில்தருநர் அமைப்புகளின் கருத்துக்கள், ஆலோசனைகள், உதவி என்பவற்றை அரசுக்குப் பெற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலான கலந்துரையாடல் ரீதியான சந்தர்ப்பங்களுக்காக ஏற்பாடுகளைச் செய்தல்.
  • பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல், வேலைசெய்யும் நிலையை மேம்படுத்தல், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு அரசுக்கும் ஊழியர், தொழில் தருநர் அமைப்புகளுக்கமிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும் சிறந்த உறவுகளையும் வளர்த்தல் மற்றும் நெருங்கிய ஒத்துழைப்பை உறுதிப்படுத்தல்.

தேசிய தொழில் ஆலோசனை சபையின் பணிகள்,

  • பின்வரும் விடயங்கள் தொடர்பில் அரசுக்கும் ஊழியர், தொழில்தருநர் அமைப்புகளுக்குமிடையில் ஆராய்ச்சிகளையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்தல்.
    • தேசிய நிறுவனங்களை நிறுவுதலும் செயற்படுத்துதலும்.
    • ஊழியர்கள், தொழில்தருநர்களின் நன்மைக்காக சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் கொண்டுவருதல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.
  • தொழில் உடன்படிக்கைகளை அங்கீகரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பான சர்வதேச தொழில் அமைப்புக்கு அனுப்பப்படுகின்ற பதில்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்தல்.

சேர்க்கை

  • தொழில், தொழில் உறவுகள் தொடர்பான கௌரவ அமைச்சர் தேசிய தொழில் ஆலோசனை சபையின் தலைவராகச் செயலாற்றுகிறார்.
  • அமைச்சர் தேசிய தொழில் ஆலோசனை சபையின் செயலாளராக, அமைச்சின் தகுதியான உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்கிறார்.
  • பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் "ஆகக்கூடிய பிரதிநிதித்துவத்துடன்" ஊழியர், தொழில் தருநர் அமைப்புகளுக்கிடையில் இவ்வாலோசனை சபையில் பிரதிநிதித்துவம் வகிக்க தகுந்த அமைப்புகளும் நிறுவனங்களும் கௌரவ அமைச்சரால் தெரிவுசெய்யப்படும்.

தேசிய தொழில் ஆலோசனை சபை செயற்படும் விதம்

  • தே.தொ.ஆ.ச. யின் கடமைக் காலம் ஒரு வருடமாகும்.
  • குறைந்தபட்சம் மாதமொருமுறை கூடும் வகையில் அமைச்சரால் தீர்மானிக்கப்படுகின்ற காலவரையறையின் பிரகாரம் நிச்சயமாகவும் தொடர்ச்சியாகவும் தே.தொ.ஆ.ச. சேவைக் கூட்டம் கூட்டப்படும்.
  • தேவையான சந்தர்ப்பங்களில் சிறப்பறிஞர்களின் ஒத்துழைப்பையும் பெற்று விசேட சிக்கல்களை ஆராய்ந்து தே.தொ.ஆ.ச. க்கு அறிக்கைகளை வழங்குவதற்கு முத்தரப்பு தொழில் குழுவையும் சந்தர்ப்பத்திற்கேற்ற வகையிலும் குழுக்களையும் நியமிக்க முடியும்.
2011 / 2012 தேசிய தொழில் ஆலோசனை சபையின் அங்கத்தினர்கள்
  1. தொழில் தருநர்
  2. ஊழியர்களின் விபரம்
  3. அரசு
தொடர்புகளுக்கு,

திரு. ஆர்.பி.ஏ. விமலவீர
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (வெளியுறவு)
தேசிய தொழில் ஆலோசனை சபை
தொலைபேசி: +94-11-2368609
தொலைநகல் : +94-11-2368609
மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it