Skip to content
default color brick color green color
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு சிரம வாசனா நிதியம்
சிரம வாசனா நிதியம் (உழைப்பு அதிஷ்ட நிதியம்)

சிரம வாசனா நிதிச் சபை, 1998 இலக்கமுடைய "சிரம வாசனா நிதிய சட்டத்தின்" கீழ், தொழிலில் ஈடுபடுகின்றவர்களின் நலனோம்பலுக்காகப் பணம் வழங்கும் பொருட்டும் அதனோடிணைந்த, மற்றும் இடைநேர் விளைவான விடயங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டும் ஏற்படுத்தப்பட்டதாகும். கீழே காட்டப்பட்டுள்ள நிதியத்தின் 06 நோக்கங்களின் கீழ் அகில இலங்கையிலும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நலனோம்பலின் பொருட்டு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் சிரம வாசனா நிதியச் சபையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் தேசிய லொத்தர் சபையுடன் இணைந்து நடத்தப்படுகின்ற "ஜாதிக்க சம்பத" லொத்தர் மூலம் வழங்கப்படுகின்றது.

நிதியத்தின் நோக்கங்கள்,

(a). சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் நலனோம்பலை மேம்படுத்தல்.

  • பெண் ஊழியர்களுக்கு வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்துவித்தல்.
  • ஊழியத்திலீடுபட்டுள்ளவர்களின் குடும்பங்களின் நலனோம்பலுக்காக அவர்களின் பிள்ளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துதல்.
  • ஊழியத்திலீடுபட்டிருக்கின்றவர்களுக்கு கைத்தொழில் பாதுகாப்பு தொடர்பாக அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துதல்.
  • ஊழியத்திலீடுபட்டிருக்கின்றவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு சுயதொழில் செயலமர்வுகளை நடத்தி நிதியுதவிகளையும் உபகரணத் தொகுதிகளையும் வழங்குதல்.
  • ஊழியத்திலீடுபட்டிருக்கின்றவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்கும் வளர்ப்பதற்கும் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துதல்.

(b). ஊழியர்கள் சேவையிலீடுபட்டிருந்த நிறுவனங்கள் முன்னறிவித்தலின்றி மூடப்படும் சந்தர்ப்பங்களில், அவ்வூழியர்களுக்கு நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கல்.

(c). அவசர சந்தரப்பங்களில் ஊழியர்களுக்கு மருத்துவ மற்றும் ஏனைய வசதிகளை வழங்குதல்.

  • ஊழியர்களுக்கும் அவர்களில் தங்கி வாழ்கின்றவர்களுக்கும் மருத்துவ சிகிச்சை நிலையங்களை நடத்தி மருந்துப் பொருட்கள், மூக்குக்கண்ணாடிகள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் போன்றவற்றை வழங்கி அவர்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துதல்.
  • அவசர சந்தர்ப்பங்களில் ஊழியர்களுக்கு மருத்துவ வசதிகளையும் நிதியுதவிகளையும் வழங்குதல்.
  • ஊழியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் சுகாதார செயலமர்வுகளை நடத்தி அவர்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான உழைப்பு செயலணியொன்றை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டமொன்றை நடத்துதல்.

(d). ஊழியர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படுகின்றபோது அவர்களுக்கு தற்காலிக நிதியுதவிகளை வழங்குதல்.

  • சட்ட உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் நீதிமன்றமொன்றில் / கைத்தொழில் நீதிமன்றமொன்றில் / தொழிலாளர் நட்டஈட்டு ஆணையாளரிடம் அல்லது தொழில் திணைக்களத்தில் சேவையை முடிவுறுத்தும் பிரிவில் இருக்கின்ற பிணக்குகளுக்காக ரூபா 10,000/- நிதியுதவி வழங்கல்.
  • இதன்பொருட்டு சிரம வாசனா நிதியத்தில் பதிவுசெய்துள்ள சட்டத்தரணி / சட்ட ஆலோசகர்களின் உதவியைத் தேவைப்படும்போது பெற்றுக்கொடுப்பதற்குத் தொடர்புபடுத்துதல்.

(e). துன்பமேற்படும் சந்தர்ப்பங்களில் ஊழியர்களுக்கு அல்லது அவர்களில் தங்கி வாழ்கின்றவர்களுக்கு நிதி ரீதியான மற்றும் ஏனைய நலன்களை வழங்கல்.

  • சுனாமி / வெள்ளப்பெருக்கு / வறட்சி / சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களுக்குப் பலியான ஊழியர்களின் குடும்பங்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் நிதியுதவி, புலமைப் பரிசில், பாடசாலை உபகரணத் தொகுதிகள் போன்றவற்றை வழங்கல்.
  • சேவையிலீடுபட்டிருக்கின்றபோது திடீர் விபத்துக்கள் / கைத்தொழில் விபத்துக்கள் போன்ற அனர்த்தங்களினால் மரணமடைகின்ற அல்லது கஷ்டங்களுக்குள்ளாகின்ற ஊழியர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் புலமைப்பரிசில்களையும் பாடசாலை உபகரணத் தொகுதிகளையும் வழங்கல்.

(f). ஊழியர்களின் நலனோம்பலுக்காக சிறந்த சேவையாற்றியுள்ளவர்களுக்குப் பரிசளித்தல்.

இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள மேலதிக விபரங்களைப் பெற 011-2368215 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்க.

தொடர்புகளுக்கு,

திரு. டீ.ஆர். ஜயலத்
பொது முகாமையாளர்,
தொழில், தொழில் உறவுகள் அமைச்சு
6ஆம் மாடி, நாரஹேன்பிட்ட, கொழும்பு 05.
தொலைபேசி : + 94 011-2368215
தொலைநகல் : + 94 011-2368979

 

உத்தியோகபூர்வ இணையத்தளம் : www.svf.gov.lk

<< பின்