Skip to content
default color brick color green color
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு கருத்திட்டங்கள்
கருத்திட்டங்கள்

அதிசிறந்த சேவைகள் தொடர்பில் தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தல்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட இலங்கையின் அதிசிறந்த சேவை தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துகின்றபோது குறித்த பிரிவுகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தல், கருத்திட்ட முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளல், முன்னேற்ற மீளாய்வு போன்ற பணிகளை இப்பிரிவு நிறைவேற்றுகின்றது.

தொழில் உலகுக்காகப் பெண்களுக்கு வலுவூட்டும் பணியகம்

தொழில்களின் போது பெண்களும் ஆண்களும் வெவ்வேறான முறையில் நடத்தப்படுவதை குறித்த கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற பிரச்சினையாக தொழில், தொழில் உறவுகள் அமைச்சு இனங்கண்டுள்ளது. பெண்களைப் பிரதான தொழிற் செயற்பாடுகளுக்கு எடுக்கின்றபோது தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவ சிக்கல்கள் தோன்றுவதைப் போன்று தொழில் உலகத்தில் பங்காளர்கள் என்றவகையில் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் சமத்துவத்தையும் நீதியையும் ஏற்படுத்துகின்றபோது அரசியல் ரீதியான மற்றும் சமூக - கலாசார சிக்கல்களும் தோன்றுகின்றன. பெண்களுக்கு வலுவூட்டும் பணியகத்தின் இறுதி நோக்கம் ஆண், பெண் சமத்துவத்தை ஏற்படுத்துவதாகும். தொழில், தொழில் உறவுகள் அமைச்சின் அனைத்துக் கருத்திட்டங்களையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் திட்டமிடுகின்றபோதும் செயற்படுத்துகின்றபோதும் ஆய்வு செய்கின்றபோதும்; மதிப்பீடு செய்கின்றபோதும் ஆண், பெண் இருதரப்பினரது நலனோம்பலைப் பற்றிக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

பிரதான பணிகள் வருமாறு,

  • புரிந்துணர்வு செயலமர்வுகள், பயிற்சியளித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சித் திட்டங்கள்.
  • பெண்களுக்கு வலுவூட்டும் கொள்கைகளைத் தயாரித்தல்.
  • சாத்தியக்கூறுகளைக் கட்டியெழுப்பும் பணிகள்.
  • பெண்களையும் ஆண்களையும் சமத்துவமாக நடத்துதல் தொடர்பான ஆவணங்களைத் திட்டமிடல், தயாரித்தல் மற்றும் விநியோகித்தல்.
  • பெண்களுடன் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தொடர்பான ஆய்வுகளை நடத்துதல்.
  • பாலியல் தொந்தரவுகள் தொடர்பான சோகங்களைப் பரிசீலனை செய்யும் பொறிமுறையொன்றை நெறிப்படுத்துதல்.
  • பெண்களையும் ஆண்களையும் சமத்துவமாக நடத்துவது தொடர்பான போட்டிகளை ஒழுங்குசெய்தல்: சுவரொட்டிகள் / கட்டுரைகள்.
தொடர்புகளுக்கு,
தொழில் உலகில் பெண்களுக்கு வலுவூட்டும் பணியகம்,
தொழில், தொழில் உறவுகள் அமைச்சு,
3வது மாடி,
318, ஹைலெவல் வீதி,
கொழும்பு - 06,
இலங்கை.
தொலைபேசி / தொலைநகல் : +94 11 2824975
மின்னஞ்சல் : slmol [at] slt.lk