Skip to content
default color brick color green color
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு தொழில் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகம்
தொழிலாளர் நட்டஈடு தொடர்பான ஆணையாளர் அலுவலகம்

சிவில் நீதிமன்றமொன்றின் அதிகாரங்களைக் கொண்டிருக்கின்ற தொழிலாளர் நட்டஈட்டு ஆணையாளரின் அடிப்படைக் கடமையானது இறுதியாக 2005ல் திருத்தப்பட்ட 1994ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தொழிலாளர் நட்டஈட்டுக் கட்டளைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகும். வேலை செய்து கொண்டிருக்கும்போது ஏற்படுகின்ற திடீர் விபத்துக்களினால் பாதிப்படைகின்ற ஊழியர்களுக்கு அல்லது அவ்விபத்துக்களால் ஊழியர்கள் இறந்துபோகின்ற சந்தர்ப்பங்களில் அவர் மீது தங்கி வாழ்கின்றவர்களுக்கு தொழில் தருநர்களிடமிருந்து நட்டஈடு பெற்றுக்கொடுப்பது இக்கட்டளைச் சட்டத்தின் நோக்கமாகும். இந்நோக்கங்களை நிறைவேற்றும்பொருட்டு தொழிலாளர் நட்டஈட்டு ஆணையாளர் பின்வரும் பணிகளை நிறைவேற்றுகிறார்.

தொழிலாளர்கள் நட்டஈடு கோரி முன்வைக்கின்ற முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்தல். ஏற்றுக்கொள்ளப்பட்ட நட்டஈடு கோரல் தொடர்பான விசாரணையை நடத்தி அக்கோரிக்கையைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் அல்லது நிராகரிப்பதன் மூலம் சிக்கலைத் தீர்த்து வைத்தல், தொழில் தருநர்களிடமிருந்து நட்டஈட்டுத் தொகையைச் சேகரித்துக் கொள்தல், அங்கவீனமுற்ற அல்லது நோய்களினால் பாதிப்புற்று வருந்துகின்ற ஊழியர்களுக்கு இன்றேல் இறந்துபோன ஊழியர்கள் மீது தங்கி வாழ்கின்ற அந்நட்டஈட்டுப் பணத்தைச் செலுத்துதல்.

கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நட்டஈட்டுத் தொகை செலுத்துவது சம்பந்தப்பட்ட விசாரணை திடீர் விபத்து நடந்த பிரதேசத்திலேயே நடத்தப்பட வேண்டும். ஆகவே, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அதற்காக நடமாடும் நீதிமன்றங்கள் நடத்தப்படுகின்றன.

மரணத்தை ஏற்படுத்திய திடீர் விபத்து தொடர்பில் தொழிலாளர் நட்டஈட்டு ஆணையாளர் மூலமே நட்டஈடு செலுத்தப்படவேண்டும். ஆனால் மரணத்தை ஏற்படுத்தாத திடீர் விபத்துகளுக்கு குறித்த நட்ட ஈட்டுத் தொகையை தொழிலாளர் அங்கவீனமுற்ற ஊழியர்களுக்கு, நோயாளியான ஊழியர்களுக்கு நேரடியாகச் செலுத்த முடியும். அவ்வாறு நேரடியாகப் பணம் செலுத்துகின்ற சந்தர்ப்பங்களில் தொழில் தருநர் - ஊழியர் ஆகிய இருதரப்பின் உடன்பாட்டுடன் பணம் செலுத்துவதை தெரிவிக்கின்ற நிருபமொன்றில் கையொப்பமிட்டு தொழிலாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக அவருக்கு அனுப்ப வேண்டும்.

இறந்த ஊழியரின் மீது தங்கியிருந்த பால்ய வயதினரின் நன்மைக்காக அவர்களுக்குச் செலுத்த வேண்டிய பணம் தொழிலாளர் நட்டஈட்டு ஆணையாளரின் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் தேசிய சேமிப்பு வங்கியில் வைப்பிலிடப்படும். அவர்கள் 18 வயதைப் பூர்த்தி செய்ததன் பின்னர் அவ்வங்கி வைப்புப் புத்தகம் (பாஸ் புத்தகம்) அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும். உரிய வயதெல்லையை அடையாத பிள்ளையொன்றின் கல்வி, பராமரிப்பு, மருத்துவ சிகிச்சை என்பவற்றுக்காக அப்பிள்ளைக்குப் பண உதவி தேவை என்பதற்கு சாட்சியங்கள் இருப்பின் தங்கி வாழும் அப்பால்ய வயதுப் பிள்ளையின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்துக்குக் கிடைக்கும் வட்டியை, தொழிலாளர் நட்டஈட்டு ஆணையாளரின் தற்றுணிபின் பிரகாரம் அப்பிள்ளையின் பாதுகாவலருக்குச் செலுத்த முடியும்.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கை முறையின் பிரகாரம் 2007ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டு முதல் 2008 ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் இந்நிறுவனத்தின் செயலாற்றுகை பின்வருமாறு அமையும். கடந்த சில மாதங்களில் நிலைமைகளுக்கு ஏற்புடையதான வகையில் இவ்வாண்டின் எஞ்சியுள்ள சிலமாதங்களிலும் மேற்படி செயலாற்றுகை நிலையை அடைவது நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும்.

தொடர்புகளுக்கு,

நிர்வாக உத்தியோகத்தர்
தொலைபேசி : + 94 011-2599662
தொலைநகல் :+ 94 011-2055267

உத்தியோகபூர்வ இணையத்தளம் : www.ocwc.gov.lk

<< பின்