Skip to content
default color brick color green color
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு தொழில் திணைக்களம்
தொழில் திணைக்களம்

தொழில் திணைக்களம் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்த தொழிலாளர்களின் நலனோம்பலை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டது. ஆகவே அது இன்று இந்தியாவிலிருந்து குடிவந்த தொழிலாளர் திணைக்களம் என்று குறிப்பிடப்பட்டது. 1923ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இந்திய குடிவரவு தொழிலாளர் கட்டளைச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் மூலம் இந்தியக் குடிவரவு தொழில் திணைக்களத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அவ்வாறிருப்பினும் உழைப்பாளர் செயலணியில் உள்நாட்டு உழைப்பாளிகள் படிப்படியாக விரிவடைந்ததையடுத்து உழைப்பாளிகள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய சக்தியாக மாறினர். இதன் காரணமாக இந்திய குடிவரவு தொழிலாளர்களின் நலனோம்பலைக் கண்டறியும் தமது வரையறுக்கப்பட்ட விடயப் பரப்பெல்லைக்கு அப்பால் செயல்லவேண்டிய நிலை காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. இதன் பிரகாரம் அனைத்து ஊழியர்களின் நலனோம்பலுக்கும் சேமலாபத்துக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அதன் பிரகாரம் 1931ல் இந்திய குடிவரவு தொழில் திணைக்களம் பொது தொழில் திணைக்களமாக மாறியது. அதன்பின்னர் அது இந்திய குடிவரவு தொழிலாளர்களுடன் சேர்த்து இந்நாட்டுத் தொழிலாளர்களின் நலனோம்பலுக்கும் பொறுப்புக்கூறுகின்ற அரச நிறுவனமாக மாறியது. ஆரம்பத்தில் திணைக்கள தலைவரின் பதவிப்பெயர் தொழில் கட்டுப்பாட்டாளர் என்பதாகும். ஆயினும், 1944ல் அப்பதவிப் பெயர் தொழில் ஆணையாளர் என மாறியதோடு 2000ல் அது தொழில் ஆணையாளர் நாயகம் என மாறியது.

எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்களின் பாதுகாப்புக்காகவும் நலனோம்பலுக்காகவும் நாற்பதுக்கும் மேற்பட்ட சட்டங்களை விரிவான விடயப் பரப்பெல்லையை உள்ளடக்கக்கூடிய வகையில் கொண்டுவந்துள்ளது. இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவது இத்திணைக்களத்தின் அடிப்படைப் பணியாக இருக்கின்றது. இதற்கு மேலதிகமாக, சமூக அபிவிருத்தி மற்றும் வேலை செய்கின்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற ஊழியர் கல்வி, மனித வளங்களை நிலைப்படுத்தல், உழைப்பு சந்தை பற்றிய தகவல்கள், சமூக இடையூறுகள் மற்றும் அவற்றை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளிலும் இத்திணைக்களம் ஈடுபட்டுள்ளது. பல காலமாகத் தலைதூக்கிக் கொண்டிருக்கின்ற பல்வேறு சேவைகளுக்கான தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு திணைக்களத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை விஞ்சியுள்ளது. பல்வேறு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிர்வாக அமைப்பு தலைமை அலுவலக அடிப்படையில் 17 பிரிவுகளைக் கொண்டுள்ளது. பிரதேச அடிப்படையில் குறித்த பணிகளை நிறைவேற்றும் பொருட்டு 11 பிராந்திய பிரதி ஆணையாளர் அலுவலகங்களும் 36 மாவட்ட தொழில் அலுவலகங்களும் 12 தொழில் உப அலுவலகங்களும் 9 மாவட்ட தொழிற்சாலை பரிசோதனை பொறியியலாளர் அலுவலகங்களும் கொண்ட பிரதேச அலுவலக வலையமைப்பு ஒன்றும் இயங்குகின்றது.

திணைக்களம் நிறைவேற்றுகின்ற பிரதான பணிகள் வருமாறு.

  • தொழில் சட்டங்களை வலுவுள்ளதாக்குதல் மற்றும் தொழில் பிணக்குகளைத் தீர்த்தல்.
  • சமூகப் பாதுகாப்பு முறைகளை நடைமுறைப்படுத்துதல்.
  • தொழில் ரீதியான நலன்கள் மற்றும் தொழிலில் ஏற்படும் திடீர் விபத்துக்களைத் தடுத்தல் போன்ற பணிகளை ஆராய்தல்.
  • தொழில் தருநர் - ஊழியர் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் ஆட்களை சேவையில் ஈடுபடுத்துவதை ஊக்குவித்தல், கைத்தொழில் துறையில் ஆய்வுகளுக்கும் திட்டமிடல் பணிகளுக்கும் பொறுப்பாக செயலாற்றுதல்.
  • உழைப்பு சந்தை பற்றிய தகவல் சேவை.
  • தொழில் புள்ளிவிபரங்களைச் சேகரித்தல், பேணல், விநியோகித்தல்.
  • தொழிற் சங்கங்களைப் பதிவு செய்தல்.
  • ச.தொ.அ. (சர்வதேச தொழில் அமைப்பு) ன் உறுப்பினர் என்ற வகையில் இலங்கையின் கடப்பாட்டை நிறைவேற்றுகின்றபோது தொழில் உறவுகள் மற்றும் மனிதவலு அமைச்சுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு செயலாற்றுதல்.

உத்தியோகபூர்வ இணையத்தளம் :

தொழில் திணைக்களம்

<< பின்