Skip to content
default color brick color green color
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் திட்டமிடல், ஆய்வு, அபிவிருத்தி பிரிவு
திட்டமிடல், ஆய்வு, அபிவிருத்தி பிரிவு

திட்டமிடல், ஆய்வு, அபிவிருத்தி பிரிவின் பிரதான பணிகள் கீழே தரப்பட்டுள்ளன.

  • அமைச்சுக்காகவும் அதன் கீழுள்ள ஏனைய நிறுவனங்களுக்காகவும் வருடாந்த செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல்.
  • அமைச்சிலும் அதன் கீழுள்ள நிறுவனங்களிலும் நிதி மற்றும் பௌதிக முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் அதுதொடர்பான கொள்கைகளைத் தயாரிப்பதற்கு உதவுதல்.
  • அரச முதலீட்டுத் திட்டத்தைத் தயாரித்து சமர்ப்பித்தல்.
  • வரவு செலவுத் திட்ட விவாதத்தில் குழுநிலையின் போது பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ள, அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான செயலாற்றுகை முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்ற செயலாற்றுகை அறிக்கையை மும்மொழிகளிலும் தயாரித்து அதைப் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தல்.
  • தொழிலாளர் விடயம் தொடர்பில் 1950ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காலாண்டு சஞ்சிகையான "இலங்கை தொழிலாளர் வர்த்தமானி" (ஸ்ரீ லங்கா கம்கரு கெசட்) சஞ்சிகையையும் தொழிலாளர் விடயம் பற்றிய ஏனைய வெளியீடுகளையும் பதிப்பித்தல், வெளியிடல்.
  • அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மே தின வெளியீட்டை வெளியிடல்.
  • அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான தரவுகளும் தகவல்களும் உள்ளடங்கிய அமைச்சின் இணையத்தளத்தை காலத்திருத்தம் செய்து நடத்துதல்.
  • அமைச்சின் இந்நாட்டு கணனி வலையமைப்பை (LCN) நடத்துதல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான பணிகளை நிறைவேற்றல்.
  • இலத்திரனியல் கட்டுப்பாடுகள் தொடர்பிலான பணிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து அவற்றை நிறைவேற்றல்.
  • அமைச்சிலிருந்தும் அதன் பிரிவுகளிலிருந்தும் அவற்றின் கீழுள்ள நிறுவனங்களிலிருந்தும் கருத்திட்ட அறிக்கைகளைப்பெற்று, அவற்றைப் பரிசீலனை செய்து தேசிய திட்டமிடல் திணைக்களத்துக்குச் சமர்ப்பித்தல்.
  • அரசாங்கத்தின் பத்தாண்டு (2006 - 2016) திட்டத்தில் தொழிலாளர் பிரிவுக்கான இலக்குகளை நிறைவேற்றிக்கொள்வது சம்பந்தப்பட்ட பணிகள்.
  • மிகச்சிறந்த சேவை தொடர்பான தேசிய திட்டத்தின்கீழ் உள்ள கருத்திட்டங்களை நெறிப்படுத்தல் மற்றும் அவற்றின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல்.
  • பெறுபேறுகளை முதன்மையாகக் கொண்ட பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்.
  • ஏனைய விசேட கருத்திட்டங்கள் / நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பான விடயங்கள்.
தொடர்புகளுக்கு,
பணிப்பாளர் - திட்டமிடல், ஆய்வு மற்றும் அபிவிருத்தி
தொலைபேசி / தொலைநகல் : +94 11 2589703
மின்னஞ்சல் : dprdmol [at] sltnet.lk